[X] Close

நீதிபதிகள், அதிகாரிகளின் கணினிகளும் கண்காணிப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பரபரப்பு தகவல்


judges-officials-snooped-on-after-centre-s-computer-surveillance-order-claims-lawyer-in-sc

  • போத்திராஜ்
  • Posted: 03 Jan, 2019 15:12 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, நமது நிருபர்

நாட்டில் உள்ள அனைவரின் கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை முகமைகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரச சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுக்குப்பின் நீதிபதிகள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் கணினிகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவித்தார்.

, கடந்த மாதம் 20-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி கண் நாட்டில் உள்ள அனைத்துக் கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்எல் சர்மா என்பவர் பொதுநலன் மனுவைக் கடந்த மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று புதிய தகவலைத் தெரிவித்தார். அதில், மத்திய அரசு கடந்த 20-ம் தேதி அனைவரின் கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை முகமைகளுக்கு அனுமதி அளித்தபின், நீதிபதிகளின் தொலைபேசிகள், கணினிகள், முக்கிய அதிகாரிகளின் கணினிகள், தொலைபேசிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. ஆதலால், தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

அதற்கு நீதிபதிகள் நீங்கள் மனுத்தாக்கல் செய்திருந்தால் விரைவில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வழக்கறிஞர் சர்மாவிடம், “ ஏற்கனவே நீங்கள் அற்பமான ஒருவிஷயத்துக்கு பொதுநலன் மனுத்தாக்கல் செய்தீர்கள். அதற்கு உங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தோம் அதைச் செலுத்திவிட்டீர்களா எனக் கேட்டனர். அதற்கு நீங்கள் உத்தரவு பிறப்பித்த அன்றே செலுத்திவிட்டேன். ஆனால், இந்த வழக்கில் எனது நோக்கம் பரிசுத்தமானது, பொதுமக்கள் நலன் சார்ந்தது என்று சர்மா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close