[X] Close

சபரிமலை விவகாரத்தில் கேரள நடவடிக்கை இந்துக்கள் மீதான பலாத்காரம் போன்றது!- அமைச்சர் சர்ச்சைக் கருத்து


union-minister-calls-kerala-s-handling-of-sabarimala-daylight-rape-of-hindus

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jan, 2019 11:06 am
  • அ+ அ-

சபரிமலை விவகாரத்தை கேரள அரசு கையாண்டவிதம் இந்துக்கள் மீது பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட பாலியல் பலாத்காரம் என சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் நீண்ட போரட்டத்துக்குப் பின்னர் நேற்று (புதன்கிழமை) இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை எதிர்த்து கேரள மாநிலத்தில் வலதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று அங்கு முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, "சபரிமலை விவகாரத்தில் முதல்வரின் பாரபட்சம் கேரளாவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலைக் கொடுத்துள்ளது. நான் அதை ஏற்கிறேன். ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த விவகாரத்தை பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் எப்படிக் கையாள்வது என்றே அரசு யோசித்திருக்க வேண்டும். கேரள அரசு இதில் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துவிட்டது. இது இந்து மக்கள் மீது பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட பாலியல் பலாத்காரம்" எனக் கூறினார்.

ஹெக்டே இதுபோல் சர்ச்சைக் கருத்தைத் தெரிவிப்பது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் தலித் போராளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தரக் குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பின்னர், எதிர்க்கட்சியினரை காகம், குரங்கு, நரி என்றும் இவை ஒருங்கிணைந்து மோடி எனும் புலிக்கு எதிராக கூச்சலிடுவதாகவும் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

2017-ல் இவர் உருவாக்கிய சர்ச்சைதான் எல்லாவற்றிலும் முக்கியமானது.  அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொண்டு அதிலிருந்து செக்குலர் (மத்ச்சார்பற்ற) என்ற வார்த்தையையே பாஜக நீக்கும் என்ரு ஹெக்டே கூறியது தேசிய அளவில் போராட்டங்களை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close