[X] Close

ரூ. 15 லட்சம் குப்பைகளுக்கு குட்பை!


debris-goodbye

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 11:01 am
  • அ+ அ-

மும்பை மலாட் பகுதியின் மஹிந்திரா நகர் குடியிருப்பில் 569 குடும்பங்கள் வசிக்கின்றன. ஒரு நாளைக்கு அக்குடியிருப்பில் சேரும் குப்பையின் அளவு ஏறக்குறைய 300 கிலோ. தோட்டங்களிலிருந்து சேரும் குப்பை 500 கிலோ. தினந்தோறும் சேரும் இந்தக் குப்பையை மக்கவைக்கும் பணியைத் தாங்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் குடியிருப்புவாசிகள்.

2016-ல் மஹிந்திரா நகரில் சேரும் குப்பையைக் குடியிருப்புவாசிகளே நிர்வகிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது பிருஹண்மும்பை மாநகராட்சி. குப்பை மேலாண்மைத் திட்டத்துக்கு வழிகாட்டவும் செய்தது.

 2018 ஜூனில் குப்பைகளைத் துண்டுதுண்டுகளாக வெட்டும் இயந்திரங்களை நிறுவினார்கள் குடியிருப்புவாசிகள். இயந்திரத்தில் வெட்டித் துண்டுகளாக்கப்பட்ட குப்பைகள் மக்கவைக்கப்பட்டு இயற்கை எருவாக மாற்றப்படுகின்றன. வழக்கமாகக் குப்பைகள் மக்குவதற்கு ஒரு மாத காலமாகும். சில ரசாயனங்களைச் சேர்ப்பதன் மூலமாக இரண்டு வாரங்களிலேயே மக்கச்செய்துவருகின்றனர் மஹிந்திரா நகர்வாசிகள்.

இந்தக் குப்பை மேலாண்மைத் திட்டத்துக்குச் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட முதலீடு ரூ.15 லட்சம் மட்டுமே. ஒவ்வொரு வருடமும் ரூ.3 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான். குடியிருப்புவாசிகளே குப்பைகளை நிர்வகிக்கும் இத்திட்டம் இன்றைய பெருநகரங்கள் அனைத்துக்கும் ஒரு முன்மாதிரி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close