[X] Close

சபரிமலையில் பெண்கள்: எதிர்க்கும் பிரதமர்; ஆதரிக்கும் பாஜக எம்பி


bjp-mp-wants-women-s-entry-in-sabarimala

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jan, 2019 10:37 am
  • அ+ அ-

சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் மேற்கொண்டது சர்ச்சையாகியுள்ள நிலையில், பாஜக எம்.பி. ஒருவர் இதனை ஆதரித்திருக்கிறார்.

வடமேற்கு டெல்லி தொகுதியின் மக்களவை எம்.பி. உதித் ராஜ் தான் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக உதித் ராஜ், "சபரிமலை கோயிலுக்குள் பெண்களை மட்டும் ஏன் அனுமதிக்கக்கூடாது? கடவுள் முன் இரு பாலினத்தவரும் சமமே. மதம், பாலினத்தால் பாகுபாடு காட்டுவது பிராமண ஆதிக்கத்தின் வெளிப்பாடு.

கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். பெண்களும் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். அப்படியென்றால், கடவுள் பெண்கள் இல்லாத இடத்தில் இருப்பது எப்படி சாத்தியமாகும்?

இது எனது கட்சியின் கருத்தல்ல தனிப்பட்ட கருத்துதான். பெண்கள் வாயிலாகத்தான் ஆண்கள் ஜனித்திருக்கிறார்கள். பெண்கள் அசுத்தமானவர்கள் என்றால் அவர்கள் வாயிலாக உலகுக்கு வரும் ஆண்களும் அசுத்தமானவர்கள்தானே" எனக் கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடியா பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, "பாரம்பரிய பழக்கவழக்கங்கள் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அதனை உடைத்தெறிய வேண்டும். குழந்தைத் திருமணம், சதி, கேரளப் பெண்கள் மேலாடை அணிய விதிக்கப்பட்டிருந்த வரி ஆகியனவும் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் என்ற போர்வையில்தானே கடைபிடிக்கப்பட்டன. ஆனால், அவை தீமை என்பதால் நாம் உடைத்தெறியவில்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட பழங்குடி இன அமைப்புகளின் இயக்குநர் என்ற முறையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவிடாமல் தடுக்கும் முயற்சிகளை நான் தொடர்ந்து எதிர்ப்பேன் என்றார். எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினரும் அம்பேத்கர்வாதிகளும் இதனை சபரிமலைக்குள் பெண்கள் நுழைய தடை செய்பவர்களை எதிர்க்கின்றனர் என்றார்.

பிரதமர் உட்பட பாஜகவினர் இவ்விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு கொண்டிருக்க பாஜக எம்.பி. ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் வழங்கிய பேட்டியில், "இந்தியாவில் எல்லா மதங்களுக்கும் மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனிப்பட்ட சடங்குகளும் பாரம்பரியங்களும் இருக்கும். இந்தியாவில் சில கோயில்களில் ஆண்கள் நுழைய தடை இருக்கிறது. சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த பெண் நீதிபதியின் கருத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர் வழங்கிய தீர்ப்பு ஒரு பெண் பார்வையில் வழங்கப்பட்டது" என்றார்.

இந்து மல்ஹோத்ரா என்ற அந்த பெண் நீதிபதி, ஆழமான மத உணர்வுகளுக்குள் தலையிடக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close