[X] Close
 

அந்தப் பெண் எனது அந்தரங்க உறுப்பைத் துண்டிக்க முயன்றார்: மீண்டுவந்த டெலிவரி மேனின் பகீர் அனுபவப் பகிர்வு


delivery-man-stabbed-20-times-recounts-brutal-attack

  • பாரதி
  • Posted: 30 Mar, 2018 10:49 am
  • அ+ அ-

மொபைல் போன் டெலிவரியை தாமதமாக்கியதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி மேனை 20 முறை கத்தியால் குத்தி கொடுமைப்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கேசவ் குமார் சிங், தனது பகீர் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

டெல்லி நிஹால் விஹார் பகுதியில், மொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை பெண் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கமல்தீப் (30) அவரது சகோதரர் ஜிதேந்திர சிங் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த நபர் தான் பட்ட வேதனைகளைப் பகிர்ந்துள்ளார்.

மறக்க முடியாத 20 நிமிடங்கள்:
வழக்கம்போல் மார்ச் 21-ம் தேதி பணிக்குச் சென்றேன். கஸ்டமரிடம் மொபைல் போனை கொண்டு சேர்க்க சிறிது தாமதமாகிவிட்டது. வீட்டை தேடித்திரிந்ததால் தாமதமானதாகக் கூறினேன். மொபைல் போனுக்கான ரூ,11,000 பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் என்னை கத்தியால் தாக்கினார். முதலில் எனது வலது மணிக்கட்டை அறுத்தார் பின்னர் எனது இடது மணிக்கட்டையும் அறுத்தார். அவரது சகோதரரும் சேர்ந்துகொண்டார். ஷூ லேஸால் என் கழுத்தை நெறிக்க முயன்றனர். அந்தப் பெண் எனது அந்தரங்க உறுப்பைத் துண்டிக்க முயன்றார். ஆனால், அவரது சகோதரர் தடுத்ததால் நிறுத்திவிட்டார். நான் தப்பிக்க முயன்றேன் என் மீது ஒரு நாற்காலியைப் போட்டு அதன் மீது ஏறி அப்பெண் அமர்ந்துகொண்டார். நான் உதவிக்குரல் எழுப்பினே. உடனே என் வாயில் ஒரு கத்தியை நுழைத்தார். மேலும், வீட்டிலிருந்த ஹோம் தியேட்டரை அலறவிட்டார். இதனால் எனது குரல் வெளியே கேட்க வாய்ப்பில்லாமல்போனது. இரவு என்னை ஒரு வேனில் ஏற்றி கழிவுநீர் கால்வாய் அருகே வீசிச் சென்றனர்.

அந்த வீட்டில் அந்த 20 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பெண் ஒரு பிசாசைப் போல் நடந்து கொண்டார்" என விவரித்தார். கேசவ் உடலில் 45 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஒருவாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

எல்லா வாடிக்கையாளர்களும் அப்படி அல்ல..
இவ்வளவு நடந்த பின்னரும், கேசவ் பூரணமாக உடல்நலன் பெற்றதும் மீண்டும் அதே பணிக்குச் செல்லப்போவதாகக் கூறினார். எல்லா வாடிக்கையாளர்களும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் இந்த வேலையைச் செய்கிறேன். வெவ்வேறு விதமான கஸ்ட்டமர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஓவ்வொருவிதம். நிறைய அவமானப்பட்டிருக்கிறேன். சிலர், என்னைப் புரிந்து கொண்டு கனிவாக நடந்து கொள்வர். சிலர் எரிச்சலடைவர். ஆனாலும், நான் என் வேலையைத் தொடர்வேன்.
நான் முழுமையாக குணமடையும் வரை எனக்கான முழு சம்பளத்தையும் தருவதாக எனது நிறுவனம் கூறியுள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்திகள்
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close