[X] Close

12 கிலோ மீட்டர் மலையில் நடந்து சென்று வாக்களித்த பழங்குடி மக்கள்: வீட்டுக்கு அருகே சென்று வாக்களிக்காத ஹைதராபாத் மக்கள்


telegana-poll-count

வாக்களிக்க 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த பழங்குடி மக்கள் - படம்: ஹர்பால் சிங்

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 15:24 pm
  • அ+ அ-

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் 12 கிலோ மீட்டர் நடந்து சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் ஹைதராபாத் நகரில் வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி இருந்தும் ஏராளமானோர் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நக்ஸலைட் ஆதிக்கம் நிறைந்த 13 தொகுதிகளில் மட்டும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. மற்ற 106 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. நகர்புறத்தை விட, கிராமப்புறங்களில் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஹைதராபாத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

வீடுகளுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் இருந்தபோதிலும் கூட பல இடங்களில் மிக குறைவான வாக்குகளே பதிவாகின. இந்த தேர்தலில் மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 68.5 சதவீத வாக்கு பதிவானது.

அதேசமயம் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகமான அளவு வாக்குப்பதிவாகியுள்ளது. இங்கு வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற 12 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் நடந்து வந்துள்ளனர்.

அஸிபாபாத் மாவட்டம் மேட்டிகுடா மற்றும் துபாகுடா ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில், பங்கிடி என்ற பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்ப்டடு இருந்தது. மேட்டிகுடாவில் 70 வாக்காளர்களும், துபாகுடாவில் 40 வாக்காளர்களும் உள்ளனர். அவர்கள் 12 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

அந்த பழங்குடி கிராமங்களில் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஒரு சிலர் மட்டும் தங்கினர். மற்றவர்கள், காலை 8 மணிக்கு தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள் மதியம் 12.30 மணிக்கு வாக்குசாவடி மையத்தை வந்தடைந்தனர். வாக்களிக்க வராதவர்கள் பெரும்பாலும் அதிக வயதானவர்கள். கரடு முரடான மலைப்பாதையில் நீண்ட தூரம் பயணித்து வந்த இவர்கள் இறுதியாக தங்கள் வாக்கை செலுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘‘மிக கடினமான பயணம் செய்தே வாக்களிக்க வந்தோம். இருப்பினும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும், இந்திய குடிமக்கள் என்பதை நாங்கள் நிறுவ வேண்டும். இல்லையென்றால் அரசியல்வாதிகள் எங்களை மறந்து விடுவார்கள்’’ எனக் கூறினர்.    

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close