[X] Close

மகள் திருமணத்தை முன்னிட்டு 5100 பேருக்கு அன்னதானம் செய்த அம்பானி


ambani-serves-food-to-5100

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Dec, 2018 13:50 pm
  • அ+ அ-

மகளின் திருமணத்தை முன்னிட்டு உதய்பூரில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் 5100 பேருக்கு 4 நாட்களுக்கு 3 வேளையும் பிரம்மாண்ட விருந்து படைக்கின்றனர்.  இதை அண்ண சேவா என்று அவர்கள் அழைக்கின்றனர்.

உதய்பூர் நகருக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில் இந்த அன்னதானம் நடந்துள்ளது. 

டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனையொட்டி உதய்பூரில் பிரம்மாண்ட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தில் மாற்றுத் திறனாளிகள் நிறையபேர் கலந்து கொண்டனர்.

 

உதய்பூர் நாராயண சேவா சன்ஸ்தானில் மூன்று முறையும் உணவு வழங்கப்படுகிறது. 

விருந்து நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி, அஜய் பிராமல், ஸ்வாதி பிராமல், இஷா அம்பானி, ஆனந்த் பிராமல் என திருமண வீட்டாரே உணவு பரிமாறினர்.

முன்னதாக குஜராத்தில் உள்ள அம்பாஜி கோயிலில் நீட்டா அம்பானி, மகளின் திருமண பத்திரிகையை வைத்து தரிசனம் செய்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close