[X] Close

ஆஞ்சநேயருக்கு சாதிச் சான்றிதழ் வேண்டும்!- வாரணாசி ஆட்சித் தலைவரிடம் மனு


caste-certificate-of-lord-hanuman-sought-after-dalit-tag

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Dec, 2018 12:51 pm
  • அ+ அ-

ஆஞ்சநேயருக்கு சாதிச் சான்றிதழ் வேண்டும் என்று வாரணாசி ஆட்சித் தலைவரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் தலித் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிட்டார். ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு அங்கு ஆல்வார் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் பேசிய அவர், ஹனுமன் ஒரு காட்டுவாசி. அவர் தலித் என்று பேசினார்.
ஆனால், இப்போது அது எங்கு வந்து நிற்கிறது தெரியுமா? ஆஞ்சநேயருக்கு சாதிச் சான்றிதழ் தாருங்கள் என வாரணாசி மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் ஷிவ்பால் யாதவ் தான் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பத்திருக்கிறார். முலாயம் சிங் யாதவின் சகோதரர் தான் இந்த ஷிப்பால் சிங். அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட முரணால் அவர் தனியாக கட்சி தொடங்கினார். அந்த கட்சியின் பெயர் பிரகதிசீல் சமாஜ்வாடி.

இது தொடர்பாக பிஎஸ்பிஎல் அமைப்பின் இளைஞரணி மாவட்ட தலைவர் ஹரீஷ் மிஸ்ரா கூறும்போது, "வாரணாசி மாவட்ட நீதிபதி அலுவலகத்தில், ஹனுமன் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணபித்துள்ளோம். முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹனுமனை தலித் என்று அழைத்து அற்ப சாதி அரசியல் செய்திருக்கிறார். அதனாலேயே அவரது சாதிச் சான்றிதழை நாங்கள் கோருகிறோம்" என்று கூறினார்.

அந்த விண்ணப்பத்தில் சங்கத் மோச்சன் கோயில்தான் ஹனுமனின் இல்லம் என்றும். அவரது சாதி என்பதற்கு எதிராக தலித் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது வயது நித்திய வயது எனவும் பிறந்த வருடம் அனைத்துகாலம் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close