[X] Close

மோடி துக்ளக், யோகி அவுரங்கசீப்!- விளாசும் காங்கிரஸ்


pm-modi-like-tughlag-yogi-like-aurangazeeb-congress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Dec, 2018 12:07 pm
  • அ+ அ-

பிரதமர் மோடியை முகமது பின் துக்ளக் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவுரங்கசீப் என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா பேசும்போது மோடி ஆட்சி செய்யும் விதம் டெல்லி சுல்தான் பேரசர் முகமது பின் துக்ளக்கையும் உ.பி.யை யோகி ஆளும்விதம் முகலாய மன்னர் அவுரங்கசீப்பை நினைவுபடுத்துவதாகவும் கூறினார். இருவரும் தாலிபன்கள் போல கெடுபிடிகளை விதிப்பதாகவும் அவர் கூறினார்.

சூரஜ்வாலா பேசியதாவது:

மோடி அவர்கள் தன்னை முகமது பின் துக்ளக் போல் அடையாளப்படுத்துகிறார். ஆதித்யநாத் அவுரங்கசீபைப் போல ஆட்சி செய்கிறார். அப்படியென்றால் இந்த தேசத்தில் ஏதாவது சட்டம் ஒழுங்கு மிஞ்சுமா? உத்தரப் பிரதேசத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தலையிலேயே சுடப்பட்டு கொல்லப்படுகிறார். ஆதித்யநாத்தை நோக்கி ஒரு விரல்கூட எழவில்லை. நாட்டில் இப்படி ஒரு தாலிபன் நிலைதான் நிலவுமா இல்லை ஜனநாயகம் மேலோங்குமா? இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பேசும்போது ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். டிசம்பர் 11-ல் மக்கள் விரும்பிய மாற்றம் நிகழும். புதிய விடியல் உதயமாகும் என்றார்.

பிரதமர் மீது விமர்சனம்..

பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் சூரஜ்வாலா. பிரதமர் குறித்து கூறும்போது, "பிரதமரின் நடவடிக்கைகள் எல்லாம் கண்டனத்துக்குரியதாகவும் வெட்கப்படக் கூடியதாகவும் உள்ளன. அவர் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரமிது.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு பிரபலங்களில் விழாக்களில் கலந்து கொள்ள நேரம் இருக்கிறது என்றால் உ.பி. காவல் அதிகாரி சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினரை சந்திக்கவும் நேரம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? டெல்லி வரை பேரணி நடத்திய விவசாயிகளிடம் பேச நேரம் இருந்திருக்க வேண்டுமல்லவா? அல்லது குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலாவது நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்தானே.

ஆனால், பொதுமக்களின் கேள்விகளுக்கு செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மூலம் பதில் சொல்லி வருகிறோம் என்று சொன்னதன் மூலம் பிரதமரும், அமித் ஷாவும் தேசத்தின் 1.3 பில்லியன் மக்களை அவமதித்துவிட்டனர்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close