[X] Close

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்; சஸ்பெண்ட் ஆன அலுவலர்கள்


rajasthan-2-officials-suspended-after-ballot-unit-found-on-road

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Dec, 2018 10:47 am
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரான் மாவட்டத்துக்கு உட்பட்ட கிசன்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் சாலையில் கேட்பாரற்று ஒரு வாக்குப்பதிவு இயந்திர கிடந்தது.

இதனையடுத்து அப்துல் ரஃபீக், பட்வாரி நாவல் என்ற இரண்டு அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் எஸ்.பி.சிங், சஸ்பெண்ட் செய்தார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆல்வார் மாவட்டம், ராம்கர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் லட்சுமண் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதர 199 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தற்போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ராபதான் தொகுதியில் போட்டி யிடுகிறார். காங்கிரஸ் முதல்வர் வேட்பாள ராக கருதப்படும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வரும் 11-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிறது.
 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close