[X] Close

மகாராஷ்டிராவில் மீண்டும் பரிதாபம்: கிலோ வெங்காயம் 51 பைசா; முதல்வருக்கு பணத்தை அனுப்பிய விவசாயி


onion-sales

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 09:46 am
  • அ+ அ-

மகாராஷ்டிராவில் வெங்காயம் ஒரு கிலோ வெறும் 51 பைசா வுக்கு விற்பனையானது. இதனால் வேதனை அடைந்த விவசாயி விற்ற பணத்தை முதல்வருக்கு அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட் டத்தில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த வெங்காய தேவையில் 50 சதவீதம் நாசிக் மாவட்டத்தில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில், வெங்காயம், கத்திரிக்காய் உட்பட வேளாண் விளைபொருட்களின் விலை மொத்தமாக சரிந்துள்ளது.

இயோலா தாலுகா அந்தர்சுல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த பிகான் தேஷ்முக். இவர் தனது நிலத்தில் வெங்காயம் அறுவடை செய்தார். அதை வேளாண் விளை பொருள் சந்தை கமிட்டிக்கு (ஏபிஎம்சி) கொண்டு சென்றார். அங்கு கடந்த 5-ம் தேதி ஏலம் விட்டதில், ஒரு கிலோ வெங்காயத்துக்கு வெறும் 51 பைசா மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.

வேறு வழியின்றி தான் கொண்டு சென்ற வெங்காயத்தை விற்றார். மொத்தம் 545 கிலோ வெங்காயத்தை விற்றத்தில் வந்த பணத்தில், ஏபிஎம்சி கட்டணம் போக அவருக்கு வெறும் ரூ.216 கிடைத்தது. மிகவும் வேதனை அடைந்த தேஷ்முக், அந்தப் பணத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தார்.

‘‘என்னுடைய வெங்காயம் தர மானதாக இருந்தும் நல்ல விலைக்கு போகவில்லை. அதனால், அந்தப் பணத்தை முதல் வருக்கு அனுப்பி விட்டேன். என்னு டைய பகுதியில் வறட்சி போன்ற நிலை உள்ளது. என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன். வாங்கிய கடனை எப்படி அடைப்பேன்’’ என்று வேதனையில் கேள்வி கேட்கிறார் தேஷ்முக்.

முன்னதாக 750 கிலோ வெங்காயத்தை ரூ.1,064-க்கு விற்ற மற்றொரு விவசாயி சஞ்சய் சாத்தே என்பவர், அந்தப் பணத்தை பிரதமர் மோடிக்கு மணியார்டரில் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close