[X] Close

‘டோல்’ கட்டணம் திடீர் ரத்து; தெலங்கானா வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


toll

  • நெல்லை ஜெனா
  • Posted: 07 Dec, 2018 16:24 pm
  • அ+ அ-

ஹைதராபாத்

தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியும் பாஜகவும் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர பகுஜன் சமாஜுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளது.

வாக்குபதிவு சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தலைநகர் ஹைதராபாத் உட்பட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்லும் மக்களுக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இதுபோலவே வசதிபடைத்த பலரும் கார்களில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக இன்று ஒருநாள் மட்டும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திரு்பபதை தவிர்க்கும் பொருட்டு ஒருநாள் கட்டணத்தை ரத்து செய்யும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார்.

மேலும் அதிகமான சுங்க கட்டணத்தால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்லும் முடிவை கைவிடுவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதனை ஏற்று தெலங்கானா உள்துறை அமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனால் தெலங்கானா மாநிலத்தில் இன்று வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து வருகின்றனர். சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்பதால் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் வாக்களிக்க செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close