[X] Close

வாக்காளர் பட்டியலில் என் பெயரைக் காணோம்!- பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா


i-don-t-understand-how-s-my-name-missing

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Dec, 2018 15:00 pm
  • அ+ அ-

பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா தெலங்கானா தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக் கூறியுள்ளார்.

 தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 32,815 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தெலங்கானாவில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியும் பாஜகவும் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர பகுஜன் சமாஜுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பியுள்ளார்.

இது குறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், "2,3 வாரங்களுக்கு முன்னதாககூட நான் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று ஆன்லைனில் சோதனை செய்தேன். எனது பெயரும் எனது தாயாரின் பெயரும் பட்டியலில் இருந்தது. எனது தந்தை, சகோதரிகளின் பெயர் இல்லை. இன்று நாங்கள் வாக்குச்சாவடிக்கு சென்றபோது எனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. எனது பெயர் எப்படி இல்லாமல் போனது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இங்கு 12 ஆண்டுகளாக வாழ்கிறேன்" எனக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close