[X] Close

திருப்பதியில் திருமணப் பத்திரிகை வைத்து தரிசனம் செய்த சாய்னா நேவால்


saina-nehwal-seeks-lord-balaji-s-blessings-for-her-wedding

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Dec, 2018 13:52 pm
  • அ+ அ-

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது திருமணப் பத்திரிகையுடன் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

ஹைதராபாத்தை சேர்ந்த சாய்னா நேவால் சக பேட்மின்டன் வீரரான காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

சாய்னா நேவால் -  காஷ்யப் திருமணம்  டிசம்பர் 16-ந்தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த காதல் திருமணம் நடைபெறுகிறது.

இதனையொட்டி சாய்னா நேவால், திருப்பதியில் தனது திருமணப் பத்திரிகையை வைத்து தரிசனம் செய்தார். பின்னர் அவர் பத்திரிகையை கோயில் உண்டியலில் செலுத்தினார்.

இந்தத் திருமணத்தில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து பிரபலங்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close