[X] Close

வெற்றி.. வெற்றி என கொட்டு முரசே!- ஃபேஸ்புக்கில் மோடி பகிர்ந்த வீடியோ


pm-modi-wraps-up-poll-campaign-with-drum-beats

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Dec, 2018 16:38 pm
  • அ+ அ-

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று உணர்த்தும் விதமாக முரசை ஒலித்து அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

அந்த வீடியோவைப் பகிர்ந்து இதுதான் வெற்றிக்கான ஒலி... வளர்ச்சியையும் மக்கள் சக்தியையும் சொல்லும் ஒலி எனப் பதிவிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், ராஜஸ்தானில் முரசை ஒலித்துப் பார்த்தேன். நீங்களும் பாருங்களேன்... எனப் பதிவிட்டிருந்தார்.

ஃபேஸ்புக் பகிர்வை 32,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆனால், அதன் பின்னூட்டங்களில் மோடியை வரவேற்றும் எதிர்த்தும் கலவையான விமர்சனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தல் பிரச்சாரத்தை முடித்த மோடி பிரம்மாண்டமான முரசை இசைத்தார். அப்போது ஒலிபெருக்கியில் ஒரு குரல் இதுதான் ராஜஸ்தான் வெற்றியின் ஓசை. 2018, 2019-ல் வெற்றி ஒலிக்கும் என்று அந்தக் குரல் முழங்கியது.

மோடி ட்ரம்ஸ் வாத்தியத்தை நன்றாக வாசிப்பார் என்பதை 4 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் ஜப்பான் சென்றிருந்தபோது ஜப்பானிய தோல் கருவி கலைஞர்களுடன் இணைந்து ஜுகல்பந்தி வாசித்தபோது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் சத்தீஸ்கர் தேர்தலின் போது தோலக் வாசித்து பிரச்சாரம் செய்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close