[X] Close

தன்னைத்தானே கலாய்த்த ஸ்மிருதி இராணி: சிரித்து ரசிக்கும் நெட்டிசன்கள்


smriti-irani-s-instagram-humour-is-on-point-here-s-proof

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Dec, 2018 14:01 pm
  • அ+ அ-

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தன்னைத்தானே கிண்டல் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஸ்மிருதியின் போஸ்ட்கள் பிரபலமே. அந்த வகையில் இந்த போஸ்ட் பதியப்பட்ட சில நிமிடங்களில் 4000 லைக்குகள் பெற்றுள்ளது.

இந்த போஸ்ட்டில் ஸ்மிருதி இராணியும் அவரது கணவர் ஜூபின் இராணியும் உள்ளனர். சிவப்பு நிற புடவையில் இருக்கும் ஸ்மிருதி தனது தலைக்கு மேல் ஒரு வளையத்தை வரைந்து அதனுள் கடவுளே, என்னை அல்ல எனது உடல் எடையை எடுத்துக் கொள் என்று எழுதியிருக்கிறார். 
அதற்கு அவரது கணவர் ஜூபின் பதில் சொல்வதுபோல் அந்த புகைப்படத்தில் அவரது தலை மீதுள்ள வளையத்துக்குள்.. கடவுளே நீ அவளையும் சேர்த்தே எடுத்துக்கொண்டாள் கூட நல்லது என எழுதியிருக்கிறது.

அந்த புகைப்படத்தின் கீழ் ஸ்மிருதி என்னே நகைச்சுவை என்று தலைப்பு கொடுத்திருக்கிறார். எனது கணவரின் மனைவி ஏதோ உண்மை கதையை சொல்கிறார் என்று சிலர் கூறலாம் என்று பகடி செய்திருக்கிறார்.

அவரது நகைச்சுவை உணர்வை பலரும் ரசித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close