[X] Close

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசித்தான் பாருங்களேன்!- மோடிக்கு அழைப்புவிடுத்த ராகுல்


try-one-someday-it-s-fun-having-questions-thrown-at-you

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Dec, 2018 12:43 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி என்றாவது ஒருநாள் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அழைப்புவிடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று (புதன்கிழமை) மாலை ஓய்ந்தது. பிரச்சாரம் முடித்த கையோடு ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

 

 

பின்னர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, "அன்புள்ள மோடி அவர்களே... இப்போது தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போதாவது உங்களுக்கு பிரதமராகப் பணியாற்ற நேரம் இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் பதவியேற்று 1654 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்கூட கலந்துகொள்ளவில்லை. ஹைதராபாத்தில் நான் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள் சிலவற்றை பகிற்கிறேன். நீங்களும் ஒரு நாள் பேசிப்பாருங்கள். உங்கள் மீது கேள்விகள் தொடுக்கப்படுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 11-ல் வெளியாகிறது. இந்த  முடிவுகள் மக்களவை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close