[X] Close

சுபோத் குமார் சிங் பெயரில் சாலை: உ.பி. அரசு அறிவிப்பு


road-to-be-named-after-subodh-kumar-singh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Dec, 2018 12:23 pm
  • அ+ அ-

உ.பி. மாநிலம் புலந்த்ஷெகரில் கடந்த திங்கள்கிழமையன்று நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பெயர் அவரது சொந்த ஊருக்கு செல்லும் சாலைக்கு சூட்டப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, புலந்த்ஷெகர் கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினரை இன்று (வியாழக்கிழமை) காலை உ.பி.  முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபோத் குமார் சிங் பிறந்த கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையான ஜெய்தாரி - குரோலி சாலைக்கு ஸ்ரீ சுபோத் குமார் சிங் ஷாகித் மார்க் எனப் பெயரிடப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், ஒரு அரசு கல்வி நிறுவனத்துக்கு சுபோத் குமார் பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே சுபோத் சிங் குமார் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. சுபோத் குமார் வங்கியில் வீட்டுக்கடன், கல்விக் கடனாகப் பெற்றிருந்த ரூ.30 லட்சத்தையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close