[X] Close

3 நாட்களுக்குப் பின்னர் ஆறுதல்!- சுபோத் குமார் சிங் குடும்பத்தினரை சந்தித்தார் உ.பி. முதல்வர்


we-met-the-chief-minister-and-he-has-assured-us-that-we-will-get-justice

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Dec, 2018 11:17 am
  • அ+ அ-

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புலந்த்ஷெகர் கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி ஓ.பி. சிங், "சுப்போத் குமார் குடும்பத்தினருக்கு உ.பி. அரசாங்கம் எப்போதுமே துணை நிற்கும் என முதல்வர் வாக்குறுதி அளித்ததாக" கூறினார்.

சுபோத் குமாரின் மூத்த மகன் ஸ்ரேய் பிரதாப் சிங், "எங்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி வாக்குறுதி அளித்தார்" என்றார்.

முன்னதாக, உ.பி. மாநிலம் புலந்த்ஷெகரில் கடந்த திங்கள்கிழமையன்று வெட்டப்பட்ட பசுவுடன் பசுக்காப்பாளர்கள் சாலை மறியலில் திடீரென ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது.

இந்தப் போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்த இந்து யுவ வாஹினி மற்றும் பஜ்ரங் தள் செயற்பாட் டாளர்களும் அந்த வழியே வந்த வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதைத் தடுக்க வந்த போலீஸார் மீது வன்முறைக் கும்பல் கல்வீசித் தாக்கியது. மேலும் துப்பாக்கியாலும் வன்முறைக் கும்பல் சுட்டுள்ளது. கல்வீச்சு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

மறைந்த ஆய்வாளரின் சகோதரி கூறும்போது, உ.பி. முதல்வர் யோகிக்கு எப்போதுமே பசுக்களை பற்றி மட்டுமே கவலை. எனது சகோதரரை கொன்றவர்களைப் பிடிப்பதில் எந்த அக்கறையும் இல்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close