[X] Close

பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்ட இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் - 11 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


gsat-satellite

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 10:58 am
  • அ+ அ-

இரா.வினோத்

இந்தியாவின் அதிக எடையும் அதி நவீன தொழில்நுட்பமும் கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பிரெஞ்சு கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் அதிவேக இணைய சேவை வழங்க இயலும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொலைத் தொடர்பு, இணைய தள சேவைகளுக்காக இஸ்ரோ பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இந்த வரிசையில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக, 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 செயற் கைக்கோள் உருவாக்கப்பட்டது.

இதை கடந்த மே மாதம் விண் ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து 4 ஆயிரம் கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே ஏவ முடியும். ஆனால் ஜிசாட் - 11 செயற்கைக் கோள் 5,854 கிலோ எடை கொண்டதாக இருந்ததால், அதை விண்ணில் ஏவும் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன் தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

மீண்டும் சரிபார்ப்பு

இந்நிலையில், இந்த செயற்கைக் கோளை திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப் பட்டிருந்த அனைத்து கருவிகளை யும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்தனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவின் கொரூ பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 VA-246 ராக்கெட் மூலம் அதிகாலை 3.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.

இதுவரை இஸ்ரோ தயாரித்த செயற்கைகோள்களில் இதுதான் அதிக எடை (5,854 கிலோ) மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டது. இதன்மூலம் இந்தியாவின் நிலப்பரப்பிலும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளிலும் இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க முடியும்.

இதில் உள்ள மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற் கான தளத்தை வழங்கும். விநாடிக்கு 16 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேட்டாவை வழங்க முடியும். புவியின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த இந்த செயற்கைக் கோளை, கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

அடுத்த ஆண்டில் ஜிசாட் - 20

இஸ்ரோ தலைவர் சிவன், பிரெஞ்ச் கயானாவில் செயற்கைக் கோள் ஏவுவதை நேரில் பார்வை யிட்டு, அது விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதை உறுதி செய்தார். அடுத்த ஆண்டில் ஜிசாட் - 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜிசாட் - 11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, பெங்களூரு இஸ்ரோ அலுவல கத்தில் உள்ள விஞ்ஞானிகள் உற்சாகத்தோடு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் வாழ்த்து

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “ஜிசாட் - 11 செயற்கைக்கோளை வெற்றிகர மாக ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ள னர். இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் இது ஒரு மைல் கல். இந்த வெற்றி நாடு முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக் கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் வியத்தகு பணிகளும், தொடர் சாதனையும் நாட்டு மக்களை கவுர வப்படுத்தியுள்ளது” என வாழ்த்து களை தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close