[X] Close

இந்தியாவின் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் டாப் 5-ல் இடம்பிடித்த தீபிகா படுகோனே


deepika-padukone-is-first-woman-to-enter-top-5-in-forbes-richest-indian-celebs-list

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Dec, 2018 15:07 pm
  • அ+ அ-

2018-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் டாப் 10 பட்டியலில் தீபிகா படுகோனே 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பெண் பிரபலம் ஒருவர் டாப் 5-ல் இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோனேவின் பத்மாவத் திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடந்த ஆண்டில் தீபிகா படுகோனேவின் வருமானம் ரூ.112.8 கோடி. அவரது கணவர் ரன்வீர் சிங் ரூ.84.17 கோடி வருமானத்துடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். அவரது வருமானம் ரூ.253.25 கோடி. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.228.09 கோடி வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இதுவரை இரண்டாவது இடத்தை எந்த ஒரு விளையாட்டு வீரரும் பிடித்ததில்லை. கிரிக்கெட் வீரர் தோனி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். அமீர் கான் பட்டியலில் 6-வது இடத்திலும் அமிதாப் பச்சன் படத்தில் பட்டியலில் 7-வது இடத்திலும் உள்ளனர்.

2018-ல் பிரபலங்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.3,140.25 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17% அதிகமாகும். சென்ற ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களின் ஒட்டுமொத்த் வருமானம் ரூ.2,683 என்ற அளவில் இருந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close