[X] Close

பிரியங்கா திருமண வரவேற்பில் மோடி: ஆவேசப்படும் நெட்டிசன்கள்


pm-in-priyanka-nick-reception-netizens-irked

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Dec, 2018 12:29 pm
  • அ+ அ-

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டது இணையவெளியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜோத்பூரில் மூன்று நாட்கள் நடந்த திருமண வைபவத்துக்குப் பின்னர் பிரியங்கா - நிக் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் ஹோட்டல் தாஜ் பேலஸில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், கவனம் ஈர்த்த விருந்தாளி என்னவோ பிரதமர் நரேந்திர மோடி.

நரேந்திர மோடி, இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றதை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் குறிப்பாக தமிழ்நாட்டு சமூகவலைதளவாசிகள் கஜா புயல் பாதிப்பை வான்வழியாக ஹெலிகாப்டர் மூலம்கூட பார்வையிட முடியாத பிரதமருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் நேரமிருக்கிறது என விமர்சித்திருந்தனர்.

இன்னும் சிலர், டெல்லியில் போராடிய விவசாயிகளைப் பார்க்க நேரமில்லை, ஏன் நாடாளுமன்றத்துக்கு கூட இடைவிடாமல் நேரம் இருந்ததில்லை ஆனால் இதற்கு மட்டும் நேரம் கிட்டியது எப்படி என விமர்சித்திருக்கின்றனர்.

 

 

 

 

முதல் முறை அல்ல..

மோடி - பிரியங்கா சோப்ரா புகைப்படம் வைரலாவதும் சர்ச்சையாவதும் இது முதன் முறையல்ல. கடந்த 2017-ம் ஆண்டு மோடியை பெர்லின் நகரில் சந்தித்தார் பிரியங்கா. அப்போது அவர் அணிந்திருந்த உடையும் மோடியின் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த விதமும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close