இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞர், 'வாட்டர்மெலன் சிக்கன்' புகழ் மஸ்தானாம்மா காலமானார்

இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞரும் 'வாட்டர்மெலன் சிக்கன்' வீடியோவால் புகழ்பெற்றவருமான மஸ்தானாம்மா காலமானார். அவருக்கு வயது 107.
ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தானாம்மாவின் யூடியூப் சேனலான 'கன்ட்ரி ஃபுட்ஸ்' பக்கம், 12 லட்சம் பேரால் பின் தொடரப்படுகிறது. அவர் செய்து காட்டிய 'வாட்டர் மெலன் சிக்கன்' வீடியோவை இதுவை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
குண்டூர் மாவட்டத்தின் தெனாலி அருகே குடிவாடா பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா. கோபாலே கிராமத்தில் மார்த்தம்மா என்ற பெயரில் வளர்ந்தார். 11 வயதில் தந்தை இறந்துவிட, முஸ்லிம் குடும்பத்தினர் அவரைத் தத்தெடுத்தனர். மார்த்தம்மா மஸ்தானம்மா ஆனார்.
தனது 22 வயதில் கணவரை இழந்த மஸ்தானம்மா, 5 மகன்களில் நால்வரைப் பறிகொடுத்தார். தனது ஒரே மகன் டேவிட்டுடன் வசித்து வந்தார் மஸ்தானம்மா. அவரின் பேரனும் கிராபிக்ஸ் டிசைனருமான லக்ஷ்மண், பாட்டியின் சமையலை வீடியோவாக எடுத்து, யூடியூபில் பதிவேற்றினார்.
குறிப்பாக 2016-ல் அவர் செய்து காட்டிய 'வாட்டர்மெலன் சிக்கன்' வீடியோ இந்திய அளவில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து மஸ்தானம்மா யூடியூப் ஸ்டார் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ரஜினியும், கமலும் ரிட்டயர்மென்ட் காலத்தில் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்; அது எடுபடாது: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
- அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
- அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்!- எச்.ராஜா
- மோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்!- ராகுல் காந்தி தாக்கு