[X] Close

உ.பி.யில் கொலையான போலீஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி, அரசு வேலை: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு


yogi-adhithyanath

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 10:43 am
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே போலீஸ் அதிகாரி குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி, அரசு வேலை வழங்குவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் புலந்த்ஷெகரில் நேற்றுமுன்தினம் வெட்டப்பட்ட பசுவுடன் பசுக்காப்பாளர்கள் சாலை மறியலில் திடீரென ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது.

இந்தப் போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்த இந்து யுவ வாஹினி மற்றும் பஜ்ரங் தள் செயற்பாட் டாளர்களும் அந்த வழியே வந்த வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதைத் தடுக்க வந்த போலீஸார் மீது வன்முறைக் கும்பல் கல்வீசித் தாக்கியது. மேலும் துப்பாக்கியாலும் வன்முறைக் கும்பல் சுட்டுள்ளது. கல்வீச்சு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புலந்த்ஷெகரைச் சேர்ந்த சுமித் என்பவர் இறந்தார்.

இந்த நிலையில் அங்கு போலீ ஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள் ளது. இதனிடையே போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். வன்முறை வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 27 நபர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பெயர் விவரம் தெரியாத 60 நபர்களும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதனிடையே இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்தாருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி, பெற்றோருக்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிவாரண நிதி, அவரது குடும்பத்தாரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close