[X] Close

ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்; பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது: பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் தீவிர வாக்கு சேகரிப்பு


rahul-modi-campaign

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 10:38 am
  • அ+ அ-

ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து, ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ெதலங்கானாவில் டிஆர்எஸ், டிடிபி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைகளுக்கு வரும் 7-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் கார் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரத மர் மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சியில் அமர வேண்டும் என்ற பேராசையால் அப்போதைய காங் கிரஸ் தலைவர்கள் பல்வேறு தவறுகளை செய்தனர். குறிப் பாக, குருநானக் தனது கடைசி காலத்தில் வசித்து வந்த கர்தார் பூர் பாகிஸ்தான் வசம் சென்றதற் குக் காரணம் காங்கிரஸாரின் தொலைநோக்கு பார்வை இல்லாத துதான். மேலும் சீக்கியர்களின் உணர்வுக்கு அவர்கள் மதிப்பளிக் கவில்லை.

கொஞ்சம் அறிவுப்பூர்வமாக அவர்கள் அப்போது செயல் பட்டிருந்தால், எல்லையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள கர்தார்பூர் இந்தியாவின் அங்கமாக இருந்திருக்கும்.

சுமார் 70 ஆண்டு கால காங் கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர் கள் கர்தார்பூர் சென்று வழிபடு வதற்கான ஏற்பாட்டை செய்ய வில்லை. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு சீக்கியர்களின் நீண்டகால கோரிக்கைப்படி இப்போது இந்தியாவில் உள்ள குர்தாஸ்பூரையும் கர்தார்பூரையும் இணைக்கும் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீக்கியர்கள் விசா இல்லாமல் அங்கு சென்றுவர முடியும். இதற்கு நான் காரண மல்ல. நீங்கள் எங்களுக்கு அளித்த வாக்குகள்தான் காரணம்.

முந்தைய ஆட்சியின்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ் மீர் எல்லையில் அச்சமின்றி ஊடுருவி ராணுவ வீரர்களை கொன்றனர். ஆனால், இப்போது தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக் கும் வகையில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு சுமார் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரு குடும்பத்தைச் (காங்கிரஸ்) சேர்ந்தவர்கள்தான் காரணம். சர்தார் வல்லபபாய் படேல் நாட் டின் முதல் பிரதமராகி இருந் தால், விவசாயிகள் இன்று இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய தேவை இருந்திருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘அனில் அம்பானிக்கு ஜே’

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலக்கேரா நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டத்தில் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். இதன்படி வேலைவாய்ப்பு வழங் கப்பட்டிருந்தால், ஆல்வார் நகரில் 4 இளைஞர்கள் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.

பிரதமர் மோடி, தான் பேசும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழங்கி பேச்சை தொடங்குகிறார். ஆனால் அவர், அனில் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுகிறார். எனவே, அவர் இனிமேல் அனில் அம்பானிக்கு ஜே, நீரவ் மோடிக்கு ஜே, லலித் மோடிக்கு ஜே எனக் கூறி பேச்சை தொடங்க வேண்டும்.

பாரத மாதா பற்றி பேசும் மோடி, விவசாயிகளை மறந்தது ஏன், தொழிலதிபர்கள் திருப்பிச் செலுத்தாத ரூ.3.5 லட்சம் கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் பெற்ற கடனில் ஒரு ரூபாயைக்கூட தள்ளுபடி செய் யவில்லை. ராஜஸ்தானில் காங் கிரஸ் ஆட்சி அமைந்த அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் கள் ரத்து செய்யப்படும்” என்றார்.

ராகுலுக்கு மோடி பதில்

இதனிடையே, சிகார் நகரில் நடந்த பிரச்சாரத்தில் ராகுலின் பேச் சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசும்போது, “சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ்காரர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாரத மாதாவுக்கு ஜே என முழங்கினர். எல்லையில் எதிரிகளை தோற் கடிக்க ராணுவ வீரர்கள் இந்த முழக்கத்தை எழுப்புகின்றனர். அப்படி இருக்கும்போது, அவர் எப்படி எனக்கு தடை விதிக்க முடியும்” என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

தெலங்கானா

இதுபோல, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலை வரும் முதல்வருமான கே.சந்திர சேகர ராவ், பாஜக, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் வேட் பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close