[X] Close

‘நில்லு நில்லு சேலஞ்ச்’ போட்டி: மாணவர்கள் கல்வீசித் தாக்கியதில் பெண் உட்பட 8 பேர் காயம்


nillu-nillu-challenge

'நில்லு நில்லு சேலஞ்ச்' சவாலுக்காக பஸ்ஸை வழிமறித்து நடனமாடும் இளைஞர்கள். (கோப்புப் படம்)

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 10:20 am
  • அ+ அ-

‘நில்லு நில்லு சேலஞ்ச்’ விவகாரத்தால் கேரளாவில் நேற்று மாணவர்கள் கல்வீசித் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

கேரளா மாநிலத்தில் 2014-ம் ஆண்டு, ‘ரெயின் ரெயின் கம் அகெய்ன்’ என்ற மலையாள மொழித் திரைப்படம் வெளியாகி பிரபலமானது. இந்தப் படத்தில், ‘நில்லு நில்லு என்ட நீலக் குயிலே’ என்ற பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் பாடியிருந்தார்.

அந்தப் பாடல் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகியுள்ளது. சமீபத்தில் பிரபலமான கிகி சேலஞ்ச் போல, இந்தப் பாடல் நில்லு நில்லு சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.

கேரள இளைஞர்கள் சிலர் தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு, சாலையில் செல்லும் வாகனத்தை திடீரென வழிமறிக்கின்றனர். அந்த வாகனத்தின் முன்பு நில்லு நில்லு பாடலைப் பாடி நடனமாடுகின்றனர். இதை ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ என்று அவர்கள் அழைக்கின்றனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர். குறிப் பாக, ‘மியூசிக் லி’, ‘டிக் டாக்’ போன்ற செல்போன் ஆப்களில் இதுபோன்ற வீடியோக்கள் அதிகமாகி, மக்களின் பாராட்டு களைப் பெற்று வருகின்றன. ஆனால் இதுபோன்ற நில்லு நில்லு சேலஞ்ச் நடனமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வாகனத்தை வழிமறித்த மாணவர்கள் நில்லு நில்லு சேலஞ்ச் பாடலுக்கு நடனமாடினர். இதற்கு வாகனத்தில் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவர்கள் மீண்டும் திரூர் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியே போவோர் வருவோர் வழிமறித்து தாக்கவும் செய்தனர். கல்வீச்சிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண் உட்பட 8 பேர் காயமடைந்தனர். போலீஸார் வந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் கல்வீசித் தாக்கியதில் சில கடைகள் சேதமடைந்தன. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close