[X] Close

பாஜகவின் வாக்கு தந்திரம்; வட இந்தியாவில் ராமர் கோயில், தென் இந்தியாவில் சபரிமலை: திருமாவளவன் குற்றச்சாட்டு


thirumavalavan-speech

மோடி, திருமா- கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 19:33 pm
  • அ+ அ-

பாஜக வாக்குகளைப் பெற வட இந்தியாவில் ராமர் கோயில் பிரச்சினையையும், தென் இந்தியாவில் சபரிமலை பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட மத்திய அரசு ஆய்வு நடத்த அனுமதித்துள்ளதைக் கண்டித்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

''மேகதாதுவில் அணை கட்ட அதிமுகவின் எதிர்ப்பு என்பது போதுமானதாக இல்லை.நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை மீறி அறிவிப்பு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு திடீர் என வந்திருப்பதை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும். பாஜக வட இந்தியாவில் இந்துக்களின் வாக்குகளைப் பெற ராமர் கோயில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.தென் இந்தியாவில் சபரிமலை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அணியைப் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். பலமாக உள்ள திமுக அணியைப் பிளவுபடுத்தி திமுகவைத் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.

கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் தான் பாஜக மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைச் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்''.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close