[X] Close

என் தந்தையின் நாட்டை விட்டு போக மாட்டேன்: யோகி ஆதித்யநாத்துக்கு அசாதுதீன் ஓவைசி பதில்


ovaisi-speech

அசாதுதீன் ஓவைசி (இடது), யோகி ஆதித்யநாத் (வலது)

  • இந்து குணசேகர்
  • Posted: 03 Dec, 2018 13:44 pm
  • அ+ அ-

என் தந்தையின் நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று அகில இந்திய எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு பதில் அளித்து இருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் -7ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் பரப்பரப்பான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தெலங்கானா தேர்தல் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ”ஒருவேளை தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெலங்கானாவிலிருந்து ஓட வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கு அசாதுதீன் ஒவைசி பதிலளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”இந்தியா என் தந்தையின் நாடு, என்னை யாரும் வெளியே செல்ல கட்டாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

ஒவைசியின்  எம்.ஐ.எம் கட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 7 இடங்களை கைபற்றியது. தொடர்ந்து  தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்வுடன்  நல்ல நட்புறவில் அக்கட்சி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close