[X] Close

ஹைதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்றுவேன்!- யோகி ஆதித்யநாத்


will-rename-hyderabad-to-bhagyanagar-yogi-adityanath

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Dec, 2018 12:45 pm
  • அ+ அ-

அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் பைசாபாத்தை அயோத்யா என்றும் பெயர் மாற்றிவிட்ட உ.பி. முதல்வர் தற்போது ஹைதராபாத்தை பாக்யநகர் எனப் பெயர் மாற்றுவேன் என சூளுரைத்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகள். இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தெலுங்கு தேசம், தெலுங்கு ஜன சமிதி, எம்ஐஎம் ஆகிய கட்சிகள் களத்தில் போட்டாபோட்டியில் உள்ளன. 
இந்நிலையில், தெலங்கானாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், "பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும். நீங்கள் ஹைதராபாத் பாக்யநகர் என மாற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும். எல்லா கட்சிகளும் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றன. ஆனால், பாஜக மட்டும்தான் எந்த பயமும் இல்லாமல் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி மீது கவனமாக செயல்படும். பாஜக எம்.எல்.ஏ., ராஜாசிங் கடந்த 4 ஆண்டுகளாக உங்களது பிரச்சினைகளுக்கு துடிப்புடன் குரல் கொடுத்திருக்கிறார். இது அவரை மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கும் தருணம்" எனப் பேசினார்.

முன்னதாக எம்.எல்.ஏ., ராஜாசிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ஆரம்பகாலத்தில் ஹைதராபாத் பாக்யநகர் என்றே வழங்கப்பட்டது. 1590-ல் குலி குதுப் ஷா ஹைதராபாத் என்று பெயர் மாற்றம் செய்தார். அப்போது இந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். கோயில்கள் அழிக்கப்பட்டன. எனவேதான் நாங்கள் பாக்யநகர் என்று பெயர் மாற்ற ஆர்வம் காட்டுகிறோம்.  தெலங்கானாவில் பாஜக பெரும்பான்மை பெற்றால் எங்களது முதல் லட்சியம் மாநிலத்தின் வளர்ச்சியாகவும் இரண்டாவது லட்சியம் ஹைதராபாத் பெயர் மாற்றமாகவும் இருக்கும். அதேபோல் செகுந்தராபாத், கரீம்நகர் பெயர்களையும் மாற்றுவோம்" என்றார்.

பாக்யநகர் என்பது பாக்மதி என்ற பெயரில் இருந்து வந்தது. பாக்மதி என்பவர் முகமது குலி குதுப் ஷாவின் அரசவையில் நடனக் கலைஞராக இருந்ததாகவும் அவர் மீது ஷா காதல் கொண்டதாகவும் கதை கூறப்படுகிறது. மேலும், ஹைதராபாத் இருந்த பெயர், குதுப் ஷாவை பாக்மதி திருமணம் செய்து கொண்ட பின்னர் பாக்யநகராக மாற்றப்பட்டதாகவும் பாக்மதி இஸ்லாத்தை தழுவியதாகவும் சில கதைகள் உள்ளன.
ஆனால், இவற்றை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மறுத்தே வருகின்றனர். பாக்மதி என்று ஒரு ராணி இருந்ததையே உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறுகின்றனர்.

ஆனால், பாக் நகர் அதாவது பூந்தோட்டங்களின் நகர் என்ற பெயர் மட்டும் வரலாற்றில் சில இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close