[X] Close

வினாத்தாளை சமூகவலை தளங்களில் வெளியிட்டு ‘அவுட்’ ஆக்கிய புகாரில் பாஜக நிர்வாகிகள் உள்ளட்டோர் கைது


gujarat-question-paper-leak-case-3-including-2-bjp-workers-arrested

  • நெல்லை ஜெனா
  • Posted: 03 Dec, 2018 12:23 pm
  • அ+ அ-

காந்தி நகர்

 

குஜராத்தில் காவலர் தேர்வு நேற்று நடைபெற இருந்தநிலையில் கேள்வித்தாளை சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகாரில் 2 பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் காவலர் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை எழுத 8.75 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள் திரண்டனர். மாவட்ட தலைநகரங்களில் இருந்து மையங்களுக்கு பல கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து இளைஞர்கள் வந்தனர். பிற்பகல் தேர்வு நடைபெற இருந்த நிலையில், ஒரு மணி நேரத்துக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வினாத்தாளை சில விஷமிகள் திருடி அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாள் காலையில் சமூகவலை தளங்களில் காவலர் தேர்வு கேள்வித்தாள் வெளியானதால் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வேறு வழியின்றி தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் தேர்வுக்காக காத்திருந்து தயார் செய்த லட்சக்கணகான இளைஞர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணைக்கு முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் கேள்வித்தாளை சமூவலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக 3 பேரை கைது இன்று கைது செய்தனர். அவர்களில் இருவர் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close