[X] Close

பணமதிப்பு நீக்கத்தால் பணப்பட்டுவாடா கட்டுப்படவில்லை: மனம் திறக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர்


compared-to-previous-elections-there-were-more-seizures-in-the-same-states

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Dec, 2018 11:55 am
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னால்கூட தேர்தலில் பணப்பட்டுவாடா கட்டுப்படவில்லை என ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியிருக்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும், கள்ளநோட்டு புழக்கம் அழிக்கப்படும், தீவிரவாதம் போன்ற நாசவேலைகளுக்கு பணம் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

ஆனால், இன்றளவும் பணமதிப்பு நீக்கம் குறித்த சர்ச்சை ஓயவில்லை. இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓ.பி.ராவத் பணி ஓய்வுக்குப் பின் அளித்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியில், பணமதிப்பு நீக்கத்தால் பணப்பட்டுவாடா கட்டுப்படவில்லை என மனம் திறந்து கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது:
பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் தேர்தல் நேரங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால், அது நீருபிக்கப்படவில்லை. அண்மையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கைப்பற்றப்பட்ட பணத்தின் அளவு முந்தைய தேர்தல் நேரங்களை ஒப்பீட்டு அளவில் அதே மாநிலங்களில் பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக கைப்பற்றப்பட்ட பணத்தின் அளவைவிட அதிகமாகவே இருக்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் கைப்பற்றப்பட்ட பணத்தின் அளவு கிட்டத்தட்ட ரூ.200 கோடி. எனவே, தேர்தல் நேரங்களில் வெளிவரும் இத்தொகை மிகவும் சக்திவாய்ந்த பின்புலத்திலிருந்து வருகிறது. பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகள் இந்த பின்புலங்களை எதுவும் செய்வதில்லை என்பதே உண்மை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close