[X] Close

தேர்தல் சமயத்தில் மட்டும் கோயில்களுக்கு செல்லும் காங்கிரஸ் தலைவர்கள்: ராஜ்நாத் சிங் கடும் சாடல்


rajnath-sings-speech

ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 22:59 pm
  • அ+ அ-

தேர்தல் பிரசாரத்தின் போது மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் கோயில்களுக்கு செல்கின்றனர் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜகவினர் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியில் அமரும் நோக்கில் பல்வேறு யுத்திகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.

அம்மாநிலத்தில் ஆல்வார் உள்ளிட்ட இடங்களில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக பெரும் பணி செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தங்கள் ஆட்சிக்காலத்தில் எந்த பணியும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றி வாக்கு பெற முடியுமா என அந்த கட்சி எண்ணுகிறது.

காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோயில்களுக்கு செல்கின்றனர். அந்த சமயத்தில் மட்டும் தான் அவர்களுக்கு கோயில் பற்றிய எண்ணமே வருகிறது.

மற்ற நேரங்களில் அவர்கள் கோயில்களை மறந்து விடுகின்றனர்.

தேர்தலுக்காக மட்டுமே அவர்கள் கோயில்களையும், வழிபாட்டையும் பயன்படுத்துகின்றனர். அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலை மனதில் வைத்தே கோயில், கோயில்களாக சென்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.  

முன்னதாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை பாகிஸ்தான் தனியாக ஒழிக்க முடியாது, அந்தநாடு கேட்டுக் கொண்டால் தீவிரவாதிகளை அழிக்க இந்தியா உதவ தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close