திருமணத்தன்று கைதான மணமகன்: மணமேடையில் இருந்து எழுப்பி அழைத்துச் சென்ற மும்பை போலீஸ்

பிரிதிநிதித்துவப்படம்
செல்போன் திருடிய வழக்கில் திருமணத்தன்று மணக்கோலத்தில் இருந்த இளைஞரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
மணகனுடன் இணைந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட அவரின் நண்பர், போலீஸைப் பார்த்ததும் மண்டபத்தில் இருந்து தலைமறைவானார்.
மும்பையின் செம்பூர் பகுதியில் உள்ள அமர் மஹால் பிரிவு அருகே கடந்த திங்கள்கிழமை ஒரு பெண் தனது, மகளுடன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வேகமாக வந்த இரு இளைஞர்கள், அந்த பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். அந்த செல்போனின் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, செல்போனை பறிகொடுத்த பெண் திலக் நகர் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரைப்பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அந்த பைக்கின் எண் ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டு இருந்தது, இளைஞர்களின் முகமும் துணியால் மூடப்பட்டு இருந்து. இந்த புகைப்படங்களை எடுத்து விசாரணையைத் தொடங்கினார்கள்.
அந்த பைக்கின் சிவாஜி நகர், கோவண்டே பகுதியில் கடந்த சில நாட்களாகச் சுற்றி வந்ததைபோலீஸார் கண்டுபடித்தனர். அதன்பின் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அந்த பைக்கின் உரிமையாளர் அஜய் சுனில் தோடே என்பதும், அவரின் நண்பர் அல்தாப் மிர்சா ஆகியோரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சிவாஜி நகரில் உள்ள அஜய் சுனில் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் சென்றனர். அப்போது வீடூ முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, திருமணக்கோலத்தில் காட்சி அளித்தது.
வீட்டில் ஒருபுறம் இளைஞர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருந்தனர். வீட்டுக்குள் போலீஸைப் பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர். அதன்பின் போலீஸார் அஜய் குறித்து விசாரித்தபோது, அவர் மணக்கோலத்தில் மணமேடையில் அமர்ந்திருந்தார்.
செல்போன் திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதில் ஈடுபட்டது அஜய் சுனில் என்பதை உறுதி செய்தனர், மேலும், விசாரணையில் செல்போனை விற்றுவிட்டதாகவும் சுனில் தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கிருந்து கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். சுனில் மீது ஐபிசி 392,34 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அதன்பின் நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற வளாகத்தில் அஜய் சுனிலுக்கும், மணப்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இது குறித்து திலக்நகர் போலீஸ் நிலைய ஆய்வாளர் சத்யவான் பிலே கூறுகையில், “ சுனிலும், அவரின் நண்பரும் இதற்குமுன் பல்வேறு செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கிறோம். சுனிலிடம் விசாரணை நடந்துவருகிறது. அவரின் நண்பர் தப்பி ஓடிவிட்டார். அவரையும் தேடி வருகிறோம் “ என்று தெரிவித்தனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- 2022-ம் ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது: பிரதமர் மோடி அறிவிப்பு
- குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர்: பிரதமர் மோடி அழைப்பு
- ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி யாத்திரை தொடங்கியது ஆர்எஸ்எஸ்: டெல்லியில் 9 நாட்கள் நடக்கிறது
- நடிகை துன்புறுத்தப்பட்ட புகைப்படங்களை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திலீப் கோரிக்கை