[X] Close

விவாகரத்து முடிவில் மாற்றமில்லை: லாலு மகன் தேஜ் பிரதாப் திட்டவட்டம்


pradab-news

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:46 am
  • அ+ அ-

லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தன் விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றார் என்ற செய்திகளை மறுத்தார்.  நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக போராடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நான் என் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை, விவாகரத்து முடிவில் மாற்றமில்லை” என்று தேஜ் பிரதாப் தெரிவித்தார்.

தன் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யப்போவதாக அவர்  இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்து அரசியல் உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.  உடல் நலம் குன்றிய தந்தை லாலுவுடன் 3 வாரங்கள் இருந்து விட்டு பாட்னா திரும்பிய தேஜ் பிரதாப், பாட்னாவில் விவாகரத்து விசாரணைகாக கோர்ட்டில் ஆஜரானர்.  கோர்ட் விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தேஜ்பிரதாப்பின் தாய் ராப்ரி தேவி, தன் மகன் வந்தவுடன் விவாகரத்து மனுவை திரும்பப் பெற செய்ய வேண்டும் என்று காத்திருந்தார்.  நகரத்திலிருந்து வந்த ஐஸ்வர்யா ராயுக்கும் சாதாரணமான தனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை, துயரமான வாழ்க்கையை வாழ்வதைவிட பிரிவதே மேல் என்று முடிவெடுத்ததாக பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close