[X] Close

ராகுல் பிராமணராக இருக்கவே முடியாது!- மத்திய அமைச்சர் சொல்லும் அறிவியல்


rajivgandhi-being-son-of-a-parsi-feroz-gandhi-can-t-have-dattatreya-gotra

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Nov, 2018 10:18 am
  • அ+ அ-

ராகுல் பிராமணராக இருக்கவே முடியாது என மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டரில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"நான் காஷ்மீர் மாநிலத்தின் கவுல் எனப்படும் பிராமண சாதியைச் சேர்ந்தவன். எனது கோத்திரம் தத்தாத்ரேய கோத்திரம்" என்று ராகுல் கூறியதுதான் இன்று இந்திய அரசியலில் ஹாட் டாபிக்.

இந்நிலையில், ராகுல் பிராமணராக இருக்கவே முடியாது என மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டரில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் அவர், "ஜவஹர்லால் நேருவின் கோத்திரம் தத்தாத்ரேய கோத்திரம்தான். ஏனெனில் அவர் பிராமணர். அவரது மகன்களுக்கும் அதே கோத்திரம்தான் வரும். ஆனால் அவரது மகள் இந்திரா காந்தி தனது தந்தையின் கோத்திரத்தை மகனுக்கு கடத்த முடியாது. அவர் ஃபெரோஸ் காந்தி என்ற ஒரு பார்ஸியை திருமணம் செய்து கொண்டார். அதனால் ராஜீவ் காந்தி ஒரு பார்ஸியின் மகன். அப்படியென்றால் ராஜீவின் மகன் ராகுலுக்கு எப்படி தத்தாத்ரேய கோத்திரம் வரும்? ராகுல் அவரது உண்மையான அடையாளத்தை சொல்லட்டும்.

ராகுல் காந்தி தன்னை பிராமணர் என்று சொல்லிக் கொண்டதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் வேதங்களின்படி ஒரு பிராமணர் பிராமணப் பெற்றோருக்குத்தான் பிறந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பொய்களால் அடிப்படையைக் கட்டமைக்க முயன்றால் தோல்வியே மிஞ்சும்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்கு ராகுல் காந்தி சென்று வழிபட்டார். சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது, கோயிலின் பூசாரி, பூஜையின்போது சொல்வதற்காக ராகுலின் கோத்திரம் குறித்து கேட்டார். அதற்கு ராகுல், "நான் காஷ்மீர் மாநிலத்தின் கவுல் எனப்படும் பிராமண சாதியைச் சேர்ந்தவன். எனது கோத்திரம் தத்தாத்ரேய கோத்திரம்" என்று ராகுல் கூறினார்.

இதுதான் சர்ச்சைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளது. குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ராகுல் காந்தி இந்துக் கோயில்களுக்கு செல்லத் தொடங்கினார். பாஜகவுக்கு போட்டியாக இந்துக்களின் வாக்கு களைப் பெற மென்மையான இந்துத்வாவை ராகுல் காந்தி கடைபிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது அதை மேலும் நீட்டித்து கோத்திரம் வரை கொண்டு வந்துள்ளார் ராகுல் காந்தி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close