[X] Close

நீங்கள் தனியாக இல்லை!- இணையத்தில் உலாவரும் உள்ளம் உருகவைக்கும் புகைப்படம்


this-photo-of-an-indian-army-officer-consoling-father-of-martyred-soldier-is-leaving-people-teary-eyed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Nov, 2018 16:43 pm
  • அ+ அ-

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது வீடியோவோ செய்தியோ அல்லது புகைப்படமோ வைரலாகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ராணுவ அதிகாரி ஒருவர் முதியவர் ஒருவரை ஆரத் தழுவி தேற்றும் ஃபோட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தீவிரவாதியாக இருந்து மனம் திருந்தி ராணுவத்தில் இணைந்தவர் லேன்ஸ் நாயக் நாசிர் அகமது வாணி. இவர் அண்மையில் ஹிஸ்புல் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில்தான் நசீர் அகமது கொல்லப்பட்டிருக்கிறார்.

அவரது இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடந்தது. அதில் இந்திய ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் நிஸாரின் தந்தையை ஆரத் தழுவி ஆறுதல் கூறியிருக்கிறார். அந்தப் புகைப்படம் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், நீங்கள் தனியாக இல்லை என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து உருக்கமான தகவல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close