[X] Close

16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகள்: பிஹார் ரயில் நிலையத்தில் கண்டுபிடிப்பால் பதற்றம்


skulls-bones-found-in-bihar

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 12:42 pm
  • அ+ அ-

பிஹார் மாநிலம், சப்பாரா ரயில் நிலையத்தில் நேற்று 16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகள் கிடந்ததால், போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள சப்பாரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் போலீஸார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ஒரு சாக்கு மூட்டையில் ஏராளமான மனித மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அந்த எலும்புகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத்(வயது29) என்பவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தன்வீர் அகமது கூறுகையில், " சப்பாரா ரயில்நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது.

அந்த மூட்டையை போலீஸார் பிரித்துப் பார்த்தபோது, அதில் 16 மனித மண்டை ஓடுகளும், 34 மனித எலும்புகளும் இருந்தன. மேலும் பூடான் நாட்டு கரன்சிகளும், பல்வேறு நாடுகளின் ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள் இருந்தன.

இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இந்த மூட்டையை இங்கு வைத்துவிட்டுச் சென்ற சஞ்சய் பிரசாத் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் இருந்து இந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் கொண்டு வருவதாகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வழியாக பூடானுக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.

மாந்திரீக செயல்கள் செய்பவர்களுக்கு மனித எலும்புகளை சப்ளை செய்யும் பணியை பிரசாத் செய்துவந்துள்ளார் என்று சந்தேக்கிறோம். விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விசாரணைக்கு எடுத்து இந்த எலும்புகள் யாருடையது, எங்கிருந்து கொண்டுவந்தார் என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம் “ எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close