[X] Close

மத்திய குழுவிடம் முறையிட முடியாததால் தஞ்சாவூர் அருகே பெண்கள் மறியல் இரவோடு இரவாக ஆய்வு நடத்தியது கண்துடைப்பு என குற்றச்சாட்டு


girls-road-block-at-thanjavur

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 11:15 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்தது கண்துடைப்பு நடவடிக்கை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் அருகே மத்தியக் குழுவிடம் முறையிட அனுமதிக்காததால் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், மத் திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று முன் தினம் இரவு ஆய்வு செய்தனர். அப் போது, காந்தி நகர், கீரனூர் ஆகிய இடங்களில் குடியிருப்புப் பகுதி யில் ஏற்பட்ட சேதத்தை பார்வை யிட்டனர். பின்னர், வடக்குப்பட்டி, பரமநகர் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து கிடப்பதை இரவு 7 மணியளவில் தலா 5 நிமிடங்கள் மட்டும் பார்வை யிட்டுவிட்டு சென்றுவிட்டனர். மத்தி யக் குழு, பெயரளவில் பார்வை யிட்டதாகவும், கண்துடைப்பு நட வடிக்கை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சேசுராஜ் கூறியது: இங்கு லட்சக்கணக்கான தென்னை, பலா, மா மரங்கள் சேதம் அடைந்துள்ளன. மத்தியக் குழுவினர் இரவோடு இரவாக வந்து டார்ச் லைட் வெளிச் சத்தில் முறிந்து கிடக்கும் ஓரிரு மரங்களை மட்டுமே பார்வையிட் டுச் சென்றுள்ளனர். பகலில் பல் வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து இருந்தால் ஒட்டுமொத்த பாதிப்புகளையும் உணர்ந்திருக்க முடியும். இவர்களது ஆய்வானது கண்துடைப்பாகவே தெரிகிறது என்றார்.

நக்கீரர் தென்னை உற்பத்தியா ளர் நிறுவனத் தலைவர் ச.வே.காம ராஜ் கூறியது: மத்தியக் குழுவோடு அமைச்சர்கள், அலுவலர்கள், ஆளும்கட்சியினர் என 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கிராமச் சாலைகளில் படையெடுத்து வந்த னர். ஆனால், சில நிமிடங்களில் ஆய்வை முடித்துவிட்டு புறப்பட்ட னர். புயலை வைத்து அரசியல் செய்வதாகவே தெரிகிறது. எல்லா வற்றையும் கடந்து மக்களை காப் பாற்ற உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட் டம் ஒரத்தநாடு புதூரில், மத்திய குழுவினரிடம் முறையிடுவதற்காக நேற்று பெண்கள் திரண்டிருந்தனர். ஆனால், குறிப்பிட்ட 2 வீடுகளை பார்வையிடுவதற்கான ஏற்பாடு களை மட்டுமே மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. மற்ற பெண்கள் போலீஸ் வளையத்துக்குள் நிறுத் தப்பட்டனர். போலீஸ் வளையத்தை பெண்கள் மீறிச் செல்ல முயன்ற தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே மத்தியக் குழு வினர் புறப்பட்டுச் சென்றதால், ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் கிராமத்தினர் அதே இடத்தில் தஞ்சா வூர் - பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியது: கடந்த 10 நாட்களாக வீடுகள், பொருட்களை இழந்து குழந்தைகளை வைத்துக் கொண்டு நடுத்தெருவில் நிற்கிறோம். குளித்தே பல நாளாகிறது. இங்கு எந்த முகாமும் அமைக்கப்பட வில்லை. ஒரு மெழுகுவத்தி கூட அரசாங்கம் தரப்பில் தரவில்லை. விஏஓ கூட வந்துப் பார்க்கவில்லை. ஆனால், நேற்று முன்தினம் இங்கு வந்த ஆட்சியர், மத்தியக் குழு பார்வையிடும் 2 வீடுகளை மட்டும் பார்த்துவிட்டு, அதற்கு பாதை அமைக்கும்படி கூறினார்.

10 நாட்களாக நாங்கள் சகதியில் தான் நடந்து செல்கிறோம். ஆனால், யாரும் வரவில்லை. ஆனால், மத் திய குழு பார்வையிடும் வீடுகளுக் குச் செல்ல விரிப்புகளும், சிமென்ட் சாலையும் அமைத்துள்ளனர். சாலையோரம் குளோரின் கொட்டி யுள்ளனர். இங்கு எப்படி இருந்தது என்பது தெரிந்தால்தானே, அவர் களுக்கு நிலைமை புரியும் என்று கோபத்துடன் கூறினர்.

இதைத் தொடர்ந்து புலவன்காடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட தென் னந்தோப்பை பார்வையிட்டு காரில் ஏறச் சென்ற மத்திய குழுவினரிடம், அதே ஊரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனது வீடு, உடைமைகளை இழந்து நிற்பதாகவும், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என கதறிய படியே காலில் விழுந்து வேண்டி னார். இதனால், அதிர்சியடைந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் அந்த மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close