[X] Close

சமையல் மோசம் என்பதற்காக மனைவியை டார்ச்சர் செய்த டாக்டர்; 2வது மனைவியுடன் வலுக்கட்டாயமாக தங்க வைத்து கொடுமை


sex-torture

சித்தரிப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 24 Nov, 2018 18:45 pm
  • அ+ அ-

தானேயில் டாக்டர் கணவன் மீது மனைவி புகார் ஒன்றை அளித்தார், அதில் தன்னை கணவர் சித்ரவதை செய்வதாகவும், 2வது மனைவியுடன் வலுக்கட்டாயமாக தங்க வைத்துக் கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

புகார் கொடுத்த மனைவியும் டாக்டர்தான். இவருக்கு வயது 37. கணவருக்கு வயது 39. கபூர்பவாடி போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தன்னை தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்தும், மேலும் பல விவகாரங்களில் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி வந்ததோடு, இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் இருவரும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இவர் கணவருக்காக இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார். இந்தத் திருமணம் நவம்பர் 2005ல் நடந்துள்ளது.

ஆனால் திருமணம் முடிந்த உடனேயே கணவரும் அவரது வீட்டாரும் புது மணப்பெண்ணை துன்புறுத்த தொடங்கியுள்ளார்கள்.  கருத்தரித்த நிலையிலும் உள்ளாட்சி தேர்தலில் நிற்க இவரை வற்புறுத்தியுள்ளனர், தேர்தலில் இவர் தோற்றும் போயுள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக திருமணம் ஆனது முதல் தன் சமையல் மோசம் என்று அவர் தன்னை கொடுமைப் படுத்தினார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு மட்டுமல்லாமல் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு புதுமனைவியுடன் முதல் மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று டார்ச்சர் செய்துள்ளார் டாக்டர்.

தொடர்ந்து இத்தகைய தாங்க முடியாமல் போலீசிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது.  இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை எனினும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close