[X] Close

மக்கள் பொறுமையை சோதிக்காமல் ராமர் கோயிலைக் கட்டுங்கள்: பாபா ராம்தேவ்


bring-a-law-for-rammandir-or-else-people-will-start-building-it-on-their-own

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Nov, 2018 15:17 pm
  • அ+ அ-

ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மக்கள் பொறுமை இழந்துவிட்டதாகவும் இனியும் காலம் தாழ்த்தினால் அவர்களே கோயிலைக் கட்டுவார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 29 முதல் ராமர் கோயில் மீதான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இது அடுத்த வருடம் ஜனவரிக்கு என ஒத்தி வைத்ததன் காரணமாக இந்துத்துவாவினர் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.
இதனால், ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றக்கூறி மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நவம்பர் 25-ல் அயோத்தி, நாக்பூர் மற்றும் பெங்களூரூவில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) சார்பில் தர்மசபை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மக்கள் பொறுமை இழந்துவிட்டனர். இனியும் காலம் தாழ்த்தினால் அவர்களே கோயிலைக் கட்டுவார்கள். அப்படி மக்களே பணியை ஆரம்பித்தால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும். எனவே, ராமர் கோயிலை கட்ட விரைவில் சட்டம் கொண்டு வாருங்கள். நமது தேசத்தில் ராமருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைத்து இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ராமரின் பிள்ளைகளே" எனக் கூறியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close