[X] Close

மனைவியுடன் மனக்கசப்பு!- விவாகரத்து குறித்து சூசகமாக ட்வீட் செய்த லாலுவின் மகன்


on-his-divorce-tej-pratap-yadav-s-cryptic-message-on-twitter

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Nov, 2018 13:36 pm
  • அ+ அ-

பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் சிங் பதிவு செய்துள்ள ட்வீட் விவாதப் பொருளாகியுள்ளது.

தேஜ் பிரதாப் யாதவுக்கும் பிஹார் முன்னாள் அமைச்சரின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தேஜ் பிரதாப் மனைவியிடமிருந்து விவாகரத்து கூறி பாட்னா உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே அவர் இந்த முடிவை எடுத்தது பரவலாக பேசி சலசலக்கப்பட்டது.

தற்போது அவர் பதிவு செய்த ட்வீட்டில், "உறவுகள் ஒருமுறை முறிந்துவிட்டால் அதை எதைக்கொண்டும் இணைக்கமுடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால், அவர் மனைவியைப் பிரிவதில் உறுதியாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close