[X] Close

ஜூ ம்மா மசூதியை இடித்துத் தள்ளுங்கள், அங்கிருந்து இந்து சிலைகள் கண்டெடுக்கப்படவில்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள்: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு.


demolish-jama-masjid-hang-me-if-idols-are-not-found-sakshi-maharaj

சாக்ஷி மகராஜ், பாஜக எம்.பி.

  • பால்நிலவன்
  • Posted: 24 Nov, 2018 12:35 pm
  • அ+ அ-

ஜூ ம்மா மசூதியை இடித்துத் தள்ளுங்கள், அங்கிருந்து இந்து சிலைகள் கண்டெடுக்கப்படவில்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என்று சர்ச்சை பேச்சு நாயகன் பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்..

உத்தரப் பிரதேசத்தில் நேற்று உன்னாவோ மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு சாக்ஷி மகராஜ் பேசியதாவது:

அரசியலுக்கு வந்த பிறகு, நான் மதுராவிலிருந்து விடுத்த முதல் அறிக்கை என்ன தெரியுமா? அயோத்தியா, மதுரா மற்றும் காசியை விட்டுவிடுவோம். முதலில் டெல்லியின் ஜூம்மா மசூதியை இடித்துத் தள்ளுங்கள். அங்குள்ள மாடிப் படிக்கட்டுக்களின் கீழேயிருந்து இந்து கடவுள் சிலைகளை கண்டெடுக்கவில்லையெனில் என்னை நீங்கள் தாராளமாக தூக்கிலிடலாம் என்பதுதான். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். முக்கியத்துவமில்லாத என்ன வழக்குகளுக்கெல்லாம் தீர்ப்புகளை வழங்குகிறார்கள். ஆனால் அயோத்தியாபிரச்சினையில் அவர்கள் காலங்கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு நரேந்திர மோடி அரசாங்கம் மக்களவையில் சட்டம் இயற்ற வேண்டுமென்று நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். 2019 மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டுமென்பதும் எனது எதிர்பார்ப்பு.

இவ்வாறு சாக்ஷி மகாராஜ் எம்.பி.பேசினார்.

இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக பதுடெல்லியில் உள்ள ஜூம்மா மசூதி திகழ்கிறது. இதனை முகலாய மன்னர் ஷாஜகான் 1644க்கும் 1656க்கும்இடைப்பட்ட காலத்தில் கட்டிமுடித்தார். அயோத்தியில் ராம் கோயிலின் ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகள் உடனடியாக தொடங்க வேண்டுமென்று பல அரசியல் தலைவர்கள் கோரி வரும் நிலையில் சாக்ஷி மகாராஜின் இத்தகைய சர்ச்சைப் பேச்சு அமைந்துள்ளது.

சஞ்சய் ராவுத்

ராமரின் பக்தர்கள் பாபர் மசூதியை இடிக்க வெறும் 17 நிமிடங்களே எடுத்துக்கொண்ட நிலையில் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கான உத்தரவை வெளியிட நீண்டகாலம் எடுத்துக்கொள்வது ஏன் என்று நேற்று சிவசேனைத் தலைவர் சஞ்சய் ராவுத் கேள்வி எழுப்பியிருந்தார்.

அயோத்தியில் சிவசேனா கூட்டம்

அயோத்தியில் இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிறு) விஷ்வ இந்து பரிஷத் வி.எச்.பி மற்றும் சில இந்து ஆர்வலர்கள் மற்றும் துறவிகள் உள்ளிட்டவர்களின் அமைப்புகளின் மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த இரண்டு நாளில் அயோத்தியில் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் கலந்துகொள்கிறார். அயோத்திப் பிரச்சினையில் விரைவில் தீர்வுகாண்பது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அயோத்தியில் இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிறு) விஷ்வ இந்து பரிஷத் வி.எச்.பி மற்றும் சில இந்து ஆர்வலர்கள் மற்றும் துறவிகள் உள்ளிட்டவர்களின் அமைப்புகளின் மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாளில் அயோத்தியில் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சிகளில் மகாராஷ்டிராவின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் கலந்துகொள்கிறார். அயோத்திப் பிரச்சினையில் விரைவில் தீர்வுகாண்பது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close