[X] Close

கடனை அடைக்க 1.50 லட்சம் முட்டைகளைத் திருடிய வியாபாரி; லாவகமாக பிடித்த போலீஸ்


police-crack-eggsasperating-robbery-in-ambernath

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Nov, 2018 15:31 pm
  • அ+ அ-

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று புராணப் பாடலில்கூட எழுதப்பட்டிருப்பதாலோ என்னவோ பட்ட கடனை எப்படியாவது அடைக்கவே எல்லோரது மனமும் துடிக்கும்.

ராஜஸ்தானில் முட்டை வியாபரி ஒருவர் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனாளியானதுடன் அதனை அடைக்க திருட்டிலும் ஈடுபட்டிருக்கிறார்.
பிவாண்டியைச் சேர்ந்தவர் சதாத் அலி. இவரொரு முட்டை வியாபாரி. அண்மையில் இவருக்கு முட்டைத் தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. 
இதனால், அவர் கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டார். அப்போது அவர் தன்னுடன் மூன்று கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்.

அதன்படி ஹைதராபாத்தில் இருந்து ராஜஸ்தானின் அம்பர்நாத் முட்டை சந்தைக்கு வரும் முட்டை லாரியை கடத்த சதி திட்டம் தீட்டினார்.
சுமார் 1.41 லட்சம் முட்டைகளுடன் லாரி அம்பர்நாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை ஹைதராபாத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஷேக் அவது முசாமில் ஓட்டி வந்தனர். அம்பர்நாத்திற்கு 4 கி.மீ தூரம் இருந்தபோது அவர்கள் சென்ற லாரியை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்தது. காரில் இருந்தவர்கள் தந்தை, மகனை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்களை காரில் ஏற்றியுள்ளனர். கைகளை கர்சீப்பால் கட்டியுள்ளனர். கொள்ளையடிக்க வந்த 4 பேரில் மூவர் காரில் செல்ல. ஒருவர் லாரியை கடத்திச் சென்றார்.
பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த இருவரையும் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து இருவரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

சிவாஜி நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட ஷேக்குக்கு அம்பர்நாத் செல்லும் சாலை மார்க்கம் அத்துப்பிடி. அதனாலேயே கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பாதையில் அவரை அழைத்துச் சென்றிருக்கலாம் என்பதை அவர் போலீஸில் கூற, போலீஸாரும் அந்தப் பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் திருடுபோனது முட்டைகள் என்பதால் முட்டைச் சந்தையில் உள்ள யாராவது ஒருவரே இதை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.

பிவாண்டி முட்டை சந்தையைச் சேர்ந்த சதாத் அலியை போலீஸார் நெருங்க அவரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து லாரியை கடத்தியதை சதாத் அலி ஒப்புக் கொண்டார். 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close