[X] Close

இந்து மதம் பற்றி பேச பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை!- சர்ச்சைப் பேச்சும் சமாதானமும்


only-brahmins-can-talk-about-hinduism-c-p-joshi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Nov, 2018 14:24 pm
  • அ+ அ-

இந்து மதம் பற்றி பேச பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி.

ராஜஸ்தானில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அரசியல் முன்னேற்படுகளில் அனைத்துக் கட்சிகளுமே ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிபி ஜோஷி இந்து மதத்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று வியழக்கிழக்மை (நேற்று) சமூக வலைதளத்தில் வைரலானது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தானில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய சி.பி. ஜோஷி, "காங்கிரஸ்காரர்கள் இந்துவாக இருக்க முடியாது என்று பாஜகவினர் சொல்கின்றனர். அப்படி சொல்வதற்கு அவர்கள் என்ன பிராமணர்களா? ” என்றார்.

மேலும் பேசும்போது, பிரதமர் மோடி, உமா பார்தி உள்ளிட்டோர் சார்ந்த ஜாதிகளின் பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கு இந்து மதம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றார். இந்து மதத்தை பற்றி பேச பிராமணர்களுக்குதான் உரிமையுள்ளது என்ற வகையில் அவர் பேசியது பலத்தரப்பு மக்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 

ராகுல் கண்டனம்:
இதற்கிடையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில்,  "காங்கிரஸின் கொள்கைக்கு நேர் எதிராக சி.பி. ஜோஷியின் கருத்துள்ளது. சமூகத்தில் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களின் மனதையும் புண்படுத்தாதப்படி கட்சியின் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். ஜோஷியின் கருத்து தவறானதுதான். அது காங்கிரஸ் கொள்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இந்த கருத்திற்கு ஜோஷிஜி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய விதத்தில் மூத்த தலைவர் பேசியதால் அதை சமாளிக்கும் வகையில் சமாதானம் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close