[X] Close

'வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் செருப்பால் அடியுங்கள்'- காலணிகளை வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர்


different-type-of-election-campaign

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 13:49 pm
  • அ+ அ-

'தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் என்னை செருப்பால் அடியுங்கள்' என்றுகூறி செருப்புகளை வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரிக்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அகுலா ஹனுமந்த் என்னும் வேட்பாளர் கொரட்லா பகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் அவர், வாக்காளர்களுக்கு காலணிகளை வழங்குகிறார்.

''தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் என்னை செருப்பால் அடியுங்கள்'' என்றுகூறி அவர் வாக்கு சேகரிக்கிறார்.

நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் அகுலாவின் போக்கு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close