[X] Close

சீக்கியர்கள் யாத்திரை செல்ல பாகிஸ்தான் எல்லைக்கு பாதை: மத்திய அரசு முடிவு


seekhs-issue

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளையொட்டி, பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலில் சீக்கியர்கள் நேற்று ‘நகர் கிர்தான்’ ஊர்வலம் சென்றனர். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 10:33 am
  • அ+ அ-

பாகிஸ்தானில் உள்ள நரோவல் மாவட்டத்தில் ராவி ஆற்றின் கரை யில் சீக்கிய மக்களின் புனித தல மான குருத்வாரா கர்த்தார்பூர் சாகேப் உள்ளது.

அங்கு இந்தியா வின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக்கில் இருந்து பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு வரை பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீக்கிய மத குருவான குருநானக் கின் 550-வது ஆண்டு பிறந்தநாள் அடுத்த ஆண்டு கொண்டாடப்படு கிறது. அதன் நினைவாக இந்தப் பாதை அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத் திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதை உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் நேற்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ‘‘மத்திய அரசு நிதியில் யாத்திரீகளுக்காக நவீன வசதிகளுடன் இந்தப் பாதை அமைக்கப்படும்’’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘‘பாகிஸ்தான் எல்லை வரை இந்தியா பாதை அமைக்கும். பாகிஸ்தான் எல்லைக்குள் கர்தார் பூர் குருத்வாரா அமைந்துள்ள பகுதி வரை பாதை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை இந்தியா கேட்டுக்கொண் டுள்ளது’’ என்று தெரிவித்தார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close