[X] Close

லாலுவின் கூட்டணியில் சேர இணை அமைச்சர் முடிவு?


minister-in-lallu-party

லாலு பிரசாத் யாதவ்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 10:25 am
  • அ+ அ-

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் பாஜக 29, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 7 மற்றும் குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி 4 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், பாஜக விற்கு 22, பாஸ்வானுக்கு 6, குஷ்வா ஹாவுக்கு 3 தொகுதிகள் கிடைத் தன.

தற்போது தே.ஜ.கூட்டணியில் பிஹார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்து விட்டார். இதனால், அவரது ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டி இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே குறைந்த தொகுதிகளை ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு குஷ்வாஹாவும் பாஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்து வருகி றார்கள்.

இதில் குஷ்வாஹா சில மாதங் களாக லாலு பிரசாத் யாதவுடன் நட்பு பாராட்டி வருகிறார். மேலும் நிதிஷ் மீண்டும் பாஜக கூட்டணி யில் இணைவதை எதிர்த்து வெளி யேறிய சரத் யாதவுடனும் தொடர் பில் உள்ளார். எனவே, குஷ்வாஹா விரைவில் தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ராஷ்டிரிய லோக்ஜன சக்தி கட்சி வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியுடன் நல்ல நட்பில் இருப்பவர் சரத் யாதவ். இவர் எங்கள் கட்சியுடன் இணைவதால் லாலுவின் மெகா கூட்டணியில் எங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். எனவே, பாஜகவிடம் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறத் தயாராகி விட்டோம்’’ எனத் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close