[X] Close

வங்கிகளுக்கு மத்திய அரசு புதிய அதிகாரம்: கடனைச் செலுத்தாதவர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி”


central-govt-new-rule-for-banks

நிதி சேவைத்துறை செயலாளர் ராஜீவ் குமார்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 10:17 am
  • அ+ அ-

பிடிஐ

வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எதிராக “லுக் அவுட் நோட்டீஸ்” வழங்கப் பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு(சிஇஓ) அதிகாரம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கியில் கடன்பெற்று வெளிநாடு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து இந்த அதிகாரத்தை வங்கிகளுக்கு அரசு வழங்கியுள்ளது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான திருத்தங்களை மேற்கொண்டு, வங்கிகளின் சிஇஓக்களும் 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியது.

வழக்கமாக வழக்குகளில் சிக்கியவர், போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ அமைப்பு சுற்றறிக்கை வெளியிடும். இப்போது அதற்கான பரிந்துரைகளை வங்கிகளின் தலைவர்கள்  உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கலாம்.

இதுகுறித்து மத்திய நிதி சேவைத் துறை செயலாளர் குமார் ராஜீவ் குமார் கூறியதாவது:

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச்செல்பவர்களைத் தடுக்கும் பொருட்டு ஆய்வு செய்ய பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் பிரதிநிதிகள் கொண்ட சிறப்பு குழுவை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உருவாக்கியது. என் தலைமையிலான அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

வங்கித்துறையில் இருக்கும் அனைத்துக் கறைகளையும் துடைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியல், பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்படும். ஆனால், பாஸ்போர்ட் விவரங்களைச் சேகரிப்பதால் மட்டும் ஒருவர் வெளிநாடு செல்வதை நாம் தடுத்துவிட முடியாது. ஆதலால், கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் பட்டியலோடு, அவர்களின் பாஸ்போர்ட் விவரங்களையும் உள்துறை அமைச்சகத்துக்கு வங்கி சிஇஓ க்கள் அனுப்புவார்கள்.

அவ்வாறு அனுப்பும்போது, அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக 'லுக் அவுட் நோட்டீஸ்' பரிந்துரை செய்து அனுப்பும் அதிகாரம் தற்போது வங்கியின் சிஇஓக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close