[X] Close

உணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: மகாராஷ்டிராவில் அதிரடி


maharastra-government

சித்தரிப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 08:21 am
  • அ+ அ-

உணவில் கலப்படம் செய்வோருக்கு  ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்வதோடு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கிரிஷ் பாபத் சட்டப்பேரவையில் இதுகுறித்து கூறும்போது, ''அரசு ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து, உணவில் கலப்படம் செய்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத் திருத்தம் சட்டப்பேரவைக் கூட்டம் முடிவதற்குள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

முன்னதாக,  சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ பாய் ஜெக்தாப், ''பாலில் கலப்படம் மேற்கொள்ளப்படுவதால், நுகர்வோருக்கு விஷமே கிடைக்கிறது. சோப்பு பவுடர், யூரியா, பால் பவுடர், சோடா, குளுக்கோஸ், சுத்திகரிப்பு எண்ணெய், உப்பு மற்றும் ஸ்டார்ச் ஆகியவை பாலுடன் கலப்படம் செய்யப்படுகிறது.

பால் கெடாமல் இருக்க இத்தகைய கலப்படங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?'' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கிரிஷ், ''இந்தக் குற்றத்துக்கு (கலப்படம்) ஆயுள் தண்டனை வழங்கப்படும்'' என்று அறிவித்தார்.

முன்னதாக, மகாராஷ்டிராவில் உணவுக் கலப்படம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close