[X] Close

வரதட்சனைக்காக மனைவியின் நாக்கை துண்டித்த கணவர்


up-man-chops-off-wife-s-tongue-over-an-argument-over-dowry

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Nov, 2018 16:11 pm
  • அ+ அ-

வரதட்சனைக்காக மனைவியின் நாக்கை கணவரே துண்டித்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ்.  இவரது தந்தை போலீஸ்காரராக உள்ளார். ஆகாசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி திருமணம் நடந்தது. 

திருமணத்திற்காக ஆகாஷ் ஒரு பெருந்தொகையை செலவிட்டதாவும், அந்த செலவு தொகையை வரதட்சணையாக கேட்டு தனது மனைவியிடம் சண்டை போட்டுவந்துள்ளார்.  

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி வரதட்சணை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவர் ஆகாஷை எதிர்த்து மனைவி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், மனைவியின் நாக்கை அறுத்துள்ளார். பின்னர்,  அவரது மனைவி  உள்ளூர் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றுள்ளார்.  மேலும், மனைவியை பத்து நாட்களாக தனியறையில் அடைத்து வைத்துள்ளார்.

ஒருவழியாக கணவரிடமிருந்து தப்பித்து பெற்றோரிடம் சென்ற அந்தப் பெண், நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் உதவியுடன் ஆகாஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் மனைவி அளித்த புகார்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காவல் உயர் அதிகாரியிடம் முறையிட எஸ்எஸ்பி உடனடி கைதுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close